NATIONAL

பல்லாயிரக்கணக்கான பேர் இடம் மாற்றம், 40,000 பேர்களின் முகவரி மர்மமாக உள்ளது

ஷா ஆலம், ஜூன் 9:

மலேசிய தேர்தல் ஆணையம்  (எஸ்பிஆர்) பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களை வாக்களிக்கும் தொகுதிகளை மாற்றியது தொடர்பில் துல்லியமான விளக்கம் அளிக்க வேண்டும் என்று புக்கிட் காட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்சுல் இஸ்கண்டர் முகமட் அகீன் கூறினார். மலாக்காவில் மட்டும் 40,000 புதிய வாக்காளர்களின் முகவரிகள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றார்.

”   புக்கிட் காட்டில் நாடாளுமன்ற தொகுதியில் ஒரே முகவரியில் பலர் வாக்காளர்களாகவும் அல்லது போலி முகவரிகளும் தெரிய வந்துள்ளது. மலாக்காவில் மட்டும் 40,000 வாக்காளர்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. ராணுவ அஞ்சல் வாக்காளர்கள் இரண்டு முகாம்களில் தங்கா பாத்து சட்ட மன்ற தொகுதியில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர். கூடுதல் வாக்காளர் பட்டியல் வெளியிடும் மே 22 அன்று திடீரென்று 3000 புதிய வாக்காளர்கள் எங்கிருந்து உள்ள ராணுவ முகாமிலிருந்து சேர்க்கப் பட்டனர்.,” என்று இஸ்கண்டர் சிலாங்கூர் இன்றுக்கு விவரித்தார்.

மேலும் கூறுகையில் எஸ்பிஆரின் இந்த நடவடிக்கை எதிர் வரும் பொதுத் தேர்தல் நேர்மையான முறையிலும் நீதியாகவும் வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கவும் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று கூறினார்.


Pengarang :