SELANGOR

மாநில அரசாங்கத்தின் கையிருப்பு வருவாய் 3.18 பில்லியனாக உயர்ந்தது

ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநிலத்தின் கையிருப்பு கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு தொடர்ந்து அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் வெ.3.05 பில்லியனாக இருந்த மாநில கையிருப்பு இம்முறை வெ.3.18 பில்லியனாக உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாண்டு மாநில அரசாங்கத்தின் வசூல் வெ.1.15 பில்லியனாக அதாவது 45.09விழுகாடு என்றும் கூறிய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இவை மாநில அரசாங்கத்தின் பட்ஜெட்டின் வெ.2.55பில்லியனின் ஒரு பகுதி என்றும் கூறினார்.

இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட வெ.1.65 பில்லியன் நிதியில் நிர்வாக செலவினம் வெ.691.87 மில்லியன் அதாவது 41.93விழுகாட்டை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தின் அதீத நிலைதன்மைக்கு அம்மாநிலத்தின் விவேகமான செயல்பாடும் நடுநிலையான செயல்பாடு அறிவார்ந்த சிந்தனை தூரநோக்கு பார்வை என அதன் ஆற்றல் மிகு செயல்பாடுதான் காரணம் என அன்மையில் மலேசிய பொருளாதார ஆய்வியல் துறை (எம் ஐ இ ஆர்) வெளிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும்,மக்கள் நலனின் கூடுதல் கவனம் மற்றும் மக்களுக்கான நன் திட்டங்கள் ஆகிவையும் அதற்கு பெரும் சாத்தியமாக அமைந்திருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில்,சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் மக்கள் நல திட்டங்களுக்கும் பெரும் பங்காற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கும் மந்திரி பெசார் நன்றி கூறிக்கொண்டார்.

நடுநிலையிலான அரசு செயல்பாடும் நேர்த்தியான நிர்வாகத்திறனும் தொடர்ந்து சிலாங்கூர் மாநில மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் தனித்துவ இலக்கை அடையும் என நம்பிக்கை தெரிவித்த மந்திரி பெசார் அனைத்து தரப்பின் ஆதரவும் செயல்பாடும் மாநில கல்வி,பொருளாதாரம்,சுகாதாரம் என பல்வேறு நிலையில் மாநில அரசு பெரும் கவனம் செலுத்திட வழிகோலும் என்றார்.

IMG_7129

சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல் திட்டமும் விவேகமான முறையிலும் தெளிவான தூரநோக்கு சிந்தனையோடும் தான் முன்னெடுக்கப்படுவதாக கூறிய அவர் மக்களின் நலனில் பெரும் கவனமும் அவர்களின் தரமான வாழ்வாதார சூழலுக்கு உத்தரவாதமும் கொடுப்பதே மாநில அரசின் இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,அரசு இலாகா மற்றும் துறைகள் கவனமாகவும் விவேகமாகவும் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்திய அவர் வீண் விரைய திட்டங்கள் அவசியமற்றது எனவும் நினைவுறுத்தினார்.

சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் தொடர்ந்து இம்மாநிலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதேவேளையில் வெளிநாடு முதலீடுகளுக்கு சிலாங்கூர் மாநிலம் நம்பிக்கையான மாநிலமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.இதற்கு சான்றாக பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கடந்தாண்டு சிலாங்கூர் மாநிலம் சுமார் 242 திட்டங்கள் மூலம் வெ.7.88 பில்லியன் உள்ளூர் மற்றும் வெளியூர் முதலீடுகளை கொண்டிருந்ததாக அவர் பெருமிதமாய் கூறினார்.

ஆற்றல் மிகு தலைமைத்துவம் சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சிறந்த முதலீட்டு மாநிலமாகவும் நம்பிக்கையான மாநிலமாகவும் விளங்குவதாக கூறிய மந்திரி பெசார் தனது அன்மைய ஜெர்மனிய பயணம் மேலும் வெளிநாடு முதலீடுகளை சிலாங்கூரில் மேம்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

 

 

 


Pengarang :