RENCANA PILIHANSELANGOR

உலு லங்காட் வெள்ளம் வற்றியது, ஆட்சிக் குழு உறுப்பினர் களமிறங்கினார்

காஜாங், ஜூன் 18:

நேற்று மாலையில் பெய்த கனத்த மழை உலு லங்காட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனாலும் வெள்ளம் சில பகுதிகளில் வற்றியதுடன் ஆற்றின் நீரோட்டம் நண்டிங்கில் இருந்து பத்து 10-ஐ நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் துணை இயக்குனர், முகமட் சானி ஹாரூல் கூறுகையில், இரவு 11.30 மணி வரையில் நண்டிங் மற்றும் சுங்கை செராய் பகுதிகளில் நீரின் அளவு குறைந்து பத்து 10-ஐ நோக்கி செல்வதாக கூறினார்.

”   மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த படையினர் பாதிக்கப்பட்ட 11 பொது மக்களை நண்டிங்கில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். அதேவேளையில், நாங்கள் சுங்கை செராய் மற்றும் பத்து 10 ஆகிய பகுதிகளில் கவனமாக இருக்கிறோம் ஏனெனில் நீரோட்டம் தற்போது அந்த பகுதியை நோக்கி செல்கிறது,” என்று பிஎச் ஓன்லைனில் தெரிவித்தார்.

இதுவரை பத்து 10-இல் இரண்டு குடும்பங்களும் மற்றும் சுங்கை செராய்-இல்  ஏழு குடும்பங்களும் மாற்று இடத்தில் கொண்டு சென்றதாக முகமட் சானி கூறினார்.

இதனிடையே, மாநில சுகாதார, சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி களம் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உலு லங்காட் தற்காலிக நிவாரண மையத்தில் சென்று கண்டார்.

தேசிய பேரழிவு நிர்வாக நிறுவனம் உலு லங்காட் மாவட்டத்தில் மூன்று வெள்ள நிவாரண மையங்களை அமைத்து 157 பாதிக்கப்பட்ட மக்களை இங்கு மாற்றப்பட்டது என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :