NATIONAL

இன்று காலையில், முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது

கோலா லம்பூர், ஜூன் 29:

இன்று காலை 9மணி நிலவரப்படி, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிலைமை சீராக உள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனத்தின் (பிளஸ்) போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தின் பேச்சாளர் கூறினார்.

தெற்கு நோக்கி செல்லும் பிளஸ் நெடுஞ்சாலை,கிலோமீட்டர் 422.5-இல் ஏற்பட்ட சாலை விபத்தில் விரைவு பேருந்து ஓட்டுனர் மற்றும் ஒரு பயணியும் உயிரிழந்தனர். அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட விரைவு பேருந்து கங்காரில் இருந்து ஜோகூர் பாரு நோக்கி பயணத்தில் இருந்தது. புக்கிட் தாகார் மற்றும் புக்கிட் பெருந்தோங் இடையே நடந்த இந்த விபத்தினால் தலைநகரம் நோக்கி செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

”  தற்போது எல்லா இடங்களிலும் குறிப்பாக வடக்கு வழி மற்றும் தெற்கு வழி போக்குவரத்து நிலைமை சீராக உள்ளது,” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்எல்எம்) கூறுகையில், கிளக்குக்கரை நெடுஞ்சாலை 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மிகவும் சீராக இருப்பதாக தெரிவித்தது.

போக்குவரத்து விவரங்கள் மேலும் அறிய பொது மக்கள் பின்வரும் தொலைபேசி அல்லது இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்:-

Plusline di 1800-88-0000 dan laman Twitter di www.twitter.com/plustrafik atau talian LLM di 1800-88-7752 serta laman Twitter di www.twitter.com/llminfotrafik.

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்


Pengarang :