SELANGOR

புக்கிட் தாகாரில் விரைவு பேருந்து விபத்தில் இரண்டு பேர் பலி

உலு சிலாங்கூர், ஜூன் 29:

இன்று அதிகாலையில், தெற்கு நோக்கி செல்லும் பிளஸ் நெடுஞ்சாலை,கிலோமீட்டர் 422.5-இல் ஏற்பட்ட சாலை விபத்தில் விரைவு பேருந்து ஓட்டுனர் மற்றும் ஒரு பயணியும் உயிரிழந்தனர் என்று பிஎச் ஓன்லைனில் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட விரைவு பேருந்து கங்காரில் இருந்து ஜோகூர் பாரு நோக்கி பயணத்தில் இருந்தது. புக்கிட் தாகார் மற்றும் புக்கிட் பெருந்தோங் இடையே நடந்த இந்த விபத்தில்,   பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது என்று புக்கிட் அமான் சாலை போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணை பிரிவின் இயக்குனர் எஸ்ஏசி ஷாருல் ஓத்மான் மன்சூர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் பயணித்த மற்ற 24 பயணிகள் எந்த காயங்கள் இன்றி தப்பித்தனர்.

”   இது வரை விபத்தில் இறந்துவிட்டதாக அறிவித்த பேருந்து ஓட்டுனர் அரசு முனியாண்டி, 44 வயது என்றும் மற்றொருவர் இந்தோனேசியா நாட்டைச்சேர்ந்த 46 வயதுடைய மஸேனா என்று காவல்துறை உறுதிப்படுத்தி விட்டது. விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருகிறது. இதில் பேருந்து ஓட்டுனரின் களைப்பு அல்லது இருண்ட சாலை அமைப்பு போன்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது,” என்று பிஎச் ஓன்லைனில் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விபத்தினால் தலைநகரம் நோக்கி செல்லும் பிளஸ் நெடுஞ்சாலை போக்குவரத்து இரண்டு கிலோ மீட்டர் ஸ்தம்பித்து போனது என்று பிஎச் ஓன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல்/படங்கள் : பிஎச் ஓன்லைன் / காவல்துறை 

Bas

Bas1

Bas3

#கேஜிஎஸ்


Pengarang :