ANTARABANGSA

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையின் பட்ஜெட் ரிம 2.5 பில்லியன் குறைக்கப்பட்டது

நியூ யோர்க், ஜூன் 30:

ஐக்கிய நாடுகள் சபை, அதன்  அமைதிப்படையின் பட்ஜெட்டில் இருந்து ஏறக்குறைய AS$600 மில்லியன் (ரிம 2.57 பில்லியன்) குறைக்கப்பட்டது என்றும் இந்த நிலைமை அமெரிக்கா செலவீனங்களை குறைக்க பரிந்துரை செய்தது முக்கிய காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில முக்கிய அதிகாரிகள் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் பட்ஜெட் குழு AS$7.3 பில்லியன்  (ரிம 31.36 பில்லியன்) அடுத்த ஆண்டிற்கான அமைதிப்படை செலவீனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டில் இதன் பட்ஜெட் AS$7.87 பில்லியனாக (ரிம 33.81 பில்லியன்) இருந்ததாக அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎப்ஃபி கூறியது.

அமைதிப்படை பணியில் அதிகமாக பங்களிப்பு அளித்து வரும் அமெரிக்கா தனது பட்ஜெட்டில் AS$1 பில்லியனை குறைக்க விண்ணப்பம் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்த ஆண்டிற்கான அமைதிப்படைக்கான செலவீனங்களை AS$7.3 பில்லியன்  (ரிம 31.36 பில்லியன்) குறைக்க வேண்டடுகோள் விடுத்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சூடான், டார்பூஃர் வட்டாரத்தில் மற்றும் ஜனநாயக கோங்கோ குடியரசு போன்ற நாடுகள் இந்த பட்ஜெட் குறைப்பின் மூலம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளில் அமைதிப்படைக்கான செலவீனங்கள் மட்டும் AS$1 பில்லியன் ஆகும்.

அமைதிப்படைப் பட்ஜெட்டில் 28.5% அமெரிக்காவே ஏற்றுக் கொண்ட வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த செலவீனங்களான AS$5.4 பில்லியனில் (ரிம 23.2 பில்லியன்) அமெரிக்கா 22% ஏற்றுக் கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :