????????????????????????????????????????????????????????????????????????????????????
NATIONAL

25% சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர் மட்டுமே ‘ஈ-கார்ட்’-இல் பதிந்தனர்

ஷா ஆலம், ஜூன் 30:

கணிக்கப்பட்ட 600,000 சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களில் 25% மட்டுமே அமலாக்க அட்டை (ஈ-கார்ட்) திட்டத்தில் விண்ணப்பம் செய்திருப்பதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஸ்தாபார் அலி கூறினார்.

நேற்று மாலை 7.50 மணி வரையில் 26,738 நிறுவனங்களின் மூலம் 154,328 விண்ணப்பங்கள் குடிநுழைவுத் துறை பெற்றதாகவும், இதில் 138,970 ஈ-கார்ட் வெளியிடப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

” இன்று (வெள்ளிக்கிழமை) ஈ-கார்ட் விண்ணப்பம் செய்யும் இறுதி நாள். ஆனால் எதிர் பார்க்கப்படும் 600,000 சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை பதிவு செய்யும் முயற்சி ஈடேற முடியாது. சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி இருக்கும் முதலாளிகள் ஏன் அவர்களை சட்ட பூர்வமாக மாற்ற முயற்சி எடுக்கவில்லை என்று நினைக்கும் பொழுது ஏமாற்றமாக இருக்கிறது ,” என்று வருத்தத்துடன் அஸ்ட்ரோ அவானியிடம் தெரிவித்தார்.

மேலும் முஸ்தாபார் கூறுகையில், நாளை முதல் சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை கைது செய்து, அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும் நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிவித்தார்.

இதனிடையே கடைசி நேரத்தில் வந்து பதியும் முதலாளிமார்களின் செயல்பாடுகளை கண்டு  முஸ்தாபார் ஏமாற்றம் அடைவதாக கூறினார். இவர்களின் செயலால் குடிநுழைவுத் துறை அதிகாலை மூன்று மணி வரை முகப்புகள் திறந்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி முதல், ஈ-கார்ட் திட்டம் இலவசமாக தொடங்கியது. இதன் மூலம் உள்நாட்டு அமைச்சு சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை அதிகாரப்பூர்வ வேலை பெர்மிட்டை கொடுத்து பணியில் அமர்த்த எண்ணம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :