NATIONAL

31 இரயில் பெட்டிகளை இழுத்து வந்த இரயில் வண்டி சரிந்தது

பாசிர் கூடாங், ஜூலை 1:

சிமிண்ட் ஏற்றிவந்த 31 இரயில் பெட்டிகளை இழுத்து வந்த இரயில் வண்டி தனது ஓடும் தலத்தில் இருந்து விலகி சரிந்தது. இந்த விபத்தினால் பாசிர் கூடாங் நெடுஞ்சாலை, கிலோமீட்டர் 29-இல் வாகனங்கள் செல்லும் வழி தடை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 ஏற்பட்டது என்றும் இரயில் வண்டி ஜோகூர் துறைமுகத்தில் இருந்து ஸ்கூடாய் நோக்கி சென்றுக் கொண்டிருந்ததாகவும் பிஎச் ஓன்லைனில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தினால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் இதனால் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்றும் செய்தி கூறுகிறது. கெடிஎம்பி நிறுவனத்தின் தொழில்முறை தொடர்பு பிரிவின் தகவல் படி, கிரேன் உதவியோடு இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் இரண்டு மணி நேரத்தில் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாக தெரிவித்துள்ளது.

”   கெடிஎம்பி இந்த விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு பொது மக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறது. நாங்கள் காவல்துறையிடம், நெடுஞ்சாலை போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவி கோரி உள்ளோம்,” என்று கெடிஎம்பி அதிகாரிகள் கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :