ANTARABANGSA

காட்டார் 13 நிபந்தனைகளை பின்பற்ற சவுதி அரேபியா மற்றும் கூட்டு நாடுகள் 48 மணி நேரம் கெடு நீட்டிப்பு

ஷா ஆலம், ஜூலை 3:

சவுதி அரேபியா மற்றும் கூட்டு நாடுகள் குவைத் நாட்டின் பரிந்துரையின் பேரில், காட்டாருக்கு 13 நிபந்தனைகளை நிறைவேற்ற 48 மணி நேரம் கெடு நீட்டிப்பு செய்து உள்ளது என குவைத் நாட்டின் எமீர் சேக் சபா அல்-அமாட் அல்-ஜபீர் கூறியதாக குவைத் செய்தி நிறுவனமான குனா அறிக்கை வெளியிட்டுள்ளது. குவைத் நாட்டின் எமீர் சவுதி அரேபியா மற்றும் கூட்டு நாடுகளை கெடுவை நீட்டிப்பு செய்ய கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.

மலேசியா கினியை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், குவைத் நாடு, காட்டார் மற்றும் சவுதி அரேபியா கூட்டு நாடுகளிடையே ஏற்பட்ட நெருக்கடியை தீர்க்க இடைத்தரகராக செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, சவுதி அரேபியா  காட்டார் நாடு, வட்டாரத்தில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்றும் ஈரானுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியது.

இதனிடையே, சவுதி அரேபியாவின் 10 நாட்கள் கொடுத்த கெடு நேற்றோடு முடிந்துவிட்டது. மேலும் தனது  நிபந்தனைகள் எதனையும் தாம் விட்டுக் கொடுக்க போவதில்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

QATAR

 

 

 

 

இதனிடையே, காட்டார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் சேக் முகமட் அப்துல் ரஹ்மான் அல்-தானி பேசுகையில், சவுதி அரேபியாவின் நிபந்தனைகள் அடிப்படை ஏதும் இல்லை என்றும் அவற்றை காட்டார் முற்றாக மறுப்பதாக தெரிவித்தார்.

சவுதி அரேபியா மற்றும் கூட்டு நாடுகளின் நிபந்தனைகளில் அல் ஜசீரா டிவியை மூடவும் மற்றும் காட்டாரில் உள்ள துருக்கியின் ராணுவ முகாமை அகற்றும் நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்றார் அவர்.

”   சவுதி அரேபியாவின் நிபந்தனைகள் காட்டாரின் இறையாண்மையை பறிக்க முயற்சி செய்கிறது. காட்டார் நாட்டின் சுதந்திரத்தை பறிக்கவும் மற்றும் தடைகளை ஏற்படுத்தியும் வருகிறது. இந்த உலகத்தில் அனைத்துலக சட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பலம் பொருந்திய நாடுகள் சிறிய நாடுகளை வஞ்சித்து வருவதை அனுமதிக்க முடியாது,” என்று இத்தாலி தலைநகர் ரோமில் பேசினார்.

#கேஜிஎஸ்


Pengarang :