RENCANA PILIHAN

சிலாங்கூர் கால்பந்து சங்கம் தொடர்ந்து மாநில அரசாங்கத்தை அரசியல் ரீதியாக பழி சுமத்தி வருகிறது ன

ஷா ஆலம், ஜூலை 4:

சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் உயர் நிர்வாகத்தில் உள்ளவர்கள் சிலாங்கூர் கால்பந்து அணி மீது நாசவேலை செய்வதாக சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். சிலாங்கூர் கால்பந்து சங்கம் தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் மீது அரசியல் ரீதியில் மோதும் போக்கை கடைபிடித்து வருகிறது என்றும் மாநிலத்தின் நிர்வாகத்தையும் மற்றும் கால்பந்து விளையாட்டையும் களகளங்கப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

”   சிலாங்கூர் கால்பந்து அணி பயிற்சி எடுத்து வருவதற்கு மாநில அரசாங்கம் தடைக்கல்லாக இருப்பதாக கூறும் அவதூறுகளை ஜீரணிக்க முடியவில்லை. மாநில அரசாங்கம் மற்றும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்திற்கும் எந்த ஒரு ஒத்துழைப்பு இல்லாமல் போனாலும் சிலாங்கூர் கால்பந்து அணி தொடர்ந்து பயிற்சிகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாசவேலை செய்யவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். ஆனாலும், சிலாங்கூர் கால்பந்து சங்கம் பொறுப்பற்ற முறையில் மாநில அரசாங்கத்தை களங்கப்படுத்தி வருகிறார்கள். மாநிலத்தின் கால்பந்து விளையாட்டின் மேம்பாட்டு முயற்சிகளை மாசுபடுத்தி வருகிறார்கள்,” என்று வருத்தத்துடன் சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் கால்பந்து சங்கம் தகவல் ஊடகங்கள் வழியாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஷா ஆலம் அரங்கில் பயிற்சி பெற அனுமதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் அமிரூடின், தகவல் ஊடகங்களை பயன்படுத்தி மாநில அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் களங்கப்படுத்தும் போக்கு தொடர்ந்து வருகிறது என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :