குளோபல், ஜூலை 11:
அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த கெசி-130 விமானம் மிஸிஸிப்பி பெல்டாவில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செய்தி நிறுவனமான wmcactionnews.com அறிக்கையின் அடிப்படையில் எண்ணெய் நிரப்பும் விமானமான கெசி-130 ஏறக்குறைய ஜெக்சனில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த விமானம் ஆகாயத்தில் வெடித்து சிதறியதாக நம்பப்படுகிறது. அமெரிக்கா ஆகாயப்படை பேச்சாளர் கெசி- 130 விமானம் அதற்கு சொந்தமானது என்று உறுதிப் படுத்தினார் .
#கேஜிஎஸ்