MEDIA STATEMENTNATIONAL

ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு தேர்தல் விதிகளை மீறவில்லை

உலு சிலாங்கூர், ஏப்ரல் 28: கோலா குபு பாரு  நகரில் நேற்று நடைபெற்ற ஐடில்பித்ரி திறந்த இல்லத்தை மாநில அரசு நடத்தியது தேர்தல் குற்ற விதி 1954ன்  மீறியது என்ற குற்றச்சாட்டை டத்தோ மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்தார்.

திறந்த இல்லத்தை ஏற்பாடு செய்வதில் பிரச்சாரக் கூறுகள் எதுவும் இல்லை என்றும், இந்த திட்டம் KKB குடியிருப்பாளர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து சிலாங்கூர் குடிமக்களுக்கும் திறந்திருக்கும் என்றும் அவர் விளக்கினார்.

ஏப்ரல் 27, 2024 அன்று உலு சிலாங்கூரில் பண்டார் கோலா குபு பாருவில் நடந்த   #கித்தாசிலாங்கூர்  உபசரிப்பின் போது டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அங்கு வந்திருந்த  மக்களுடன் நட்புறவு கலந்துரையாடலின் போது கூறினார்.

”    உண்மையில் இது மாநில விழா, இது போன்ற விழாக்களை மாநிலம் முழுவதும் பல  மாவட்டங்களில் நடத்தியுள்ளோம். இங்கு  இதைச் செய்வதற்கு முன்பு நாங்கள் இந்தப் பகுதியை தேர்ந்தெடுக்க முக்கியமாக விளங்கியது,  சிலாங்கூர் மாநில இளவரசர்  தெங்கு அமீர் ஷாவின்  மாநில சுற்றுப் பயணத்தில் முதல் மாவட்டமாக உலு சிலாங்கூர்  விளங்குவதால்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் சமீபத்தில் டிங்கில் அல்லது சிப்பாங் மாவட்டத்தில் நடந்தது, அது நல்ல வரவேற்பை  சுற்றுவட்டார மக்களிடம் பெற்றது.  எனவே சுதந்திர கொண்டாட்டத்தையும் மற்ற மாவட்ட சமூகத்தைச் சந்திக்க (இடத்தை) சுழல் முறையில் மேற்கொள்ள  உத்தேசித்துள்ளோம்.  இங்கு நடந்த #கித்தா சிலாங்கூர் 2024  ராயா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
ஏப்ரல் 27, 2024 அன்று  உலு சிலாங்கூரில் பண்டார் கோல குபு பாருவில் நடந்த  #கித்தா சிலாங்கூர்  கொண்டாட்டத்தின்  போது பல்வேறு சுவையான உணவுகளை அனுபவிக்கும் வாய்ப்பை பொதுமக்கள் தவறவிடவில்லை.

நான்கு முனைப் போட்டியில், பக்காத்தான் ஹராப்பான்   சின்னத்தை  பயன்படுத்தும் பாங் சாக் தாவ் யூனிட்டி அரசு வேட்பாளராகவும், கைருல் அஸ்ஹாரி (பி என்), ஹஃபிஸா ஜைனுடின் (PRM) மற்றும்  கியோவ்  கி சின் (சுயேச்சை) ஆகியோர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியில் 40,226 வாக்காளர்கள் உள்ளனர், இதில் 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீசார், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் மற்றும் நாட்டில் இல்லாத வாக்காளர் ஒருவர் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் (SPR) இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மே 11 ஆம் தேதி 14 நாட்கள் பிரச்சார காலத்துடன் நிர்ணயித்துள்ளது.


Pengarang :