RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில அரசாங்க இலாகா & நிறுவனங்களின் நிதி நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது

கோலா லம்பூர், ஜூலை 31:

தேசிய தணிக்கை இலாகா சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் 16 இலாகாகள் மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களின் நிதி நிர்வாகம் சிறப்பான முறையில் இருப்பதாக தெரிவித்தது. அதில் ஏழு இலாகாகள் மிகவும் சிறந்த அடைவை எட்டி உள்ளதாக கூறியுள்ளது.

தேசிய தணிக்கை இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் மடினா முகமட் கூறுகையில், மேலும் ஏழு இலாகாகள் மற்றும் நிறுவனங்கள் சிறந்த நிலையில் இருப்பதாக கூறினார். இதையடுத்து மேலும் இரண்டு நிறுவனங்கள் மனநிறைவு அளிக்கும் வகையில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

”   மாநில இலாகா அல்லது நிறுவனங்கள் தங்களின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதில் குறிப்பாக நிதி நிர்வாக அதிகாரிகளுக்கு திறன்களை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

ekonomi-selangor-1

 

 

 

 

தேசிய தணிக்கை இலாகாவின் 2016-இன் அறிக்கை அடிப்படையில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கஜானா 96.88% வசூலை எட்டியது. இதையடுத்து மாநில அரசாங்கத்தின் செயலாளர் அலுவலகம் 96.2% மற்றும் செப்பாங் நகராண்மை கழகம் 96.12% வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :