PBTSELANGOR

கோலா சிலாங்கூரில் இரண்டு புதிய ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து வழித்தடங்கள்

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 2:

கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகெஎஸ்) இரண்டு ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையின் வழித்தடங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பண்டார் புஞ்சாக் அலாம்-பண்டார் சௌஜானா உத்தாமா-தாமான் ஸ்ரீ பூலோ ஆகஸ்ட் 1-இல் இருந்து தொடங்கியது.

இந்த புதிய வழித்தடத்தை தொடர்ந்து கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் உள்ளது என்றும் ஏற்கனவே கோலா சிலாங்கூர்-செகிஞ்சான் வழி வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இந்த இலவச பேருந்து சேவை காலை 6 மணி தொடங்கி இரவு மணி 10 வரை நீடிக்கும். வாரத்தில் ஏழு நாட்களிலும் செயல்படும் என்றும் தெஸ்கோ புஞ்சாக் அலாம் மற்றும் ஸ்ரீ பிரிஸ்தானா வாணிப மையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்

BAS SMART KS

 


Pengarang :