SELANGOR

சிலாங்கூர் உணவு பெருவிழா 180,000 வருகையாளர்களை கவர்ந்துள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 7:

மலேசியாவின் முதல் நிலை உணவு பெருவிழாவான சிலாங்கூர் உணவு பெருவிழா 2017, பல்லின மக்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 180,000 வருகையாளர்கள் பங்கு பெற்றனர்.

நேற்று முடிவடைந்த பெருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டு நகர, பாரம்பரிய மற்றும் பல்சுவை உணவுகள் பொது மக்களுக்கு பரிமாறினார்கள்.

சிலாங்கூர் மாநில இளையோர், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். மலேசியாவில் முதல் நிலை உணவு பெருவிழாவான இந் நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு பொது மக்களின் பேராதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது.

IMG_9265

 

 

 

 

 

”   நம்முடைய இலக்கை நாம் அடைந்து விட்டோம். வருகையாளர்கள் மிக மகிழ்ச்சியாக காணப்பட்டனர். உணவு வணிகர்கள் பல்வேறு நூதனமான வகையில் உணவுகளை தயாரித்து பொது மக்களை கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது,” என்று டத்தாரான் கெமெர்டேகாஹானில் நடந்த சிலாங்கூர் உணவு பெருவிழாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

IMG_8903

 

 

 

 

 

உணவு பெருவிழாவில் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் பரிவு மிக்க மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பெருவிழா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியில் இருந்து இரவு 9மணி வரை பொது மக்களுக்கு திறந்திருந்தது.

IMG_8839


Pengarang :