SUKANKINI

கிம் சுவி: மூன்று புள்ளிகளை பெற்றது, அணியின் உற்சாகத்தை மேலோங்கச்

ஷா ஆலம், ஆகஸ்ட் 15:

நேற்று நடந்த 2017 சீ விளையாட்டு போட்டிக்கான கால்பந்து குழு நிலையிலான ஆட்டத்தில் புருணைக்கு எதிரான வெற்றி விளையாட்டாளர்களுக்கு நல்ல ஒரு தொடக்கமாக இருக்கும் என்று பயிற்சியாளர் டத்தோ ஓங் கிம் சுவி கூறினார்.

22 வயதுக்குற்பட்ட கால்பந்து அணியின் பயிற்சியாளர் கிம் சுவி ‘ஏ’ குழுவின் முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனது விளையாட்டாளர்களை பாராட்டினார். முதல் ஆட்டத்தில் மூன்று புள்ளிகள் பெற்றது மிக முக்கியம் என்றார்.

Ong Kim Swee

 

 

 

 

”  புருணை விளையாட்டாளர்கள் தங்களின் கோல் கம்பத்தை சுற்றி வளைத்து கொண்டதால் பல கோல் அடிக்கும் வாய்ப்புகள் வீணாகியது. ஆனாலும், மூன்று புள்ளிகளை பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது,” என்று ஷா ஆலம் அரங்கில் நடைபெற்ற ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

இந்த ஆட்டத்தில் மலேசியா நான்காவது நிமிடத்தில் முகமட் சபாஃவி ரஷிட் மூலம் முதல் கோலை புகுத்தியது. ஆனால் அடுத்த நிமிடத்திலேயே முகமட் ஸூல்கைரி ஹாடி ரஸாலி மூலம் புருணை கோல் புகுத்தி ஆட்டத்தை சமநிலை படுத்தியது. அடாம் நோர் அஸ்லின் 60-வது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்து நாட்டின் நற்பெயரை நிலைநிறுத்தினார்.

கிம் சுவி, சில புது முகங்களின் விளையாட்டு திறனில் நிம்மதி அடைவதாக தெரிவித்தார். ஆனாலும், அடுத்து வரும் சிங்கப்பூர் இடையிலான ஆட்டத்தில் முன்னணி ஆட்டக்காரர்கள் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும். சிங்கப்பூர், மியான்மரிடம் 2-0 கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்


Pengarang :