NATIONAL

கிள்ளானில் கெட்கோ மக்களின் போராட்ட விளக்கக் கூட்டம்

உண்மைக் கதையை தெரிந்து கொள்ள வாருங்கள்:

1978-லிருந்து 8 ஏக்கர் நிலத்திற்காக போராடி வரும் கெட்கோ குடியிருப்பாளர்கள் வரும் 26 ஆகஸ்ட் 2017-ல் கிள்ளான் மக்களின் ஆதரவை நாடி வருகின்றனர்.

இன்று கெட்கோ போராட்டத்தைப் பற்றி பல கதைகளை படித்து வருகிறோம். இதில் எது உண்மை என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? சமீபத்தில் கெட்கோ குடியிருப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, இரண்டு நாளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். எதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கடந்த 2 வாரத்திற்கு முன், நீல சீருடை அணிந்து ஒரு குழுவினர் தாங்களும் கெட்கோ குடியிருப்பாளர்கள் என கூறிக் கொண்டு நெகிரி செம்பிலான் மாநில மந்திரிக்கு நன்றி தெரிவிக்க சிரம்பானில் ஒன்றுக் கூடினர். இதைப் பற்றிய தகவல் தெரிய வேண்டுமா?

உண்மைத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள கெட்கோ குடியிருப்பாளர்கள் கிள்ளானுக்கு வருகின்றனர். அவ்விளக்க கூட்டத்தின் விபரம் பின்வருமாறு:

திகதி    : 26 ஆகஸ்ட் 2017 (சனிக்கிழமை)
நேரம்   : இரவு 8 மணி
இடம்   : டேவான் எம்.பி.கே, பெர்கலி, கிள்ளான்

ஏற்பாடு: பி.எஸ்.எம் கிள்ளான் கிளை மற்றும் சிலாங்கூர் மாநில மக்கள் நீதி கட்சி இளைஞர் அணி இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

 


Pengarang :