NATIONAL

ஆட்சியை எடுத்தவுடன் பாக்காத்தான் அதிக மதிப்பிலான திட்டங்களை மறுஆய்வு செய்யும்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 25:

14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும், தற்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் திட்டமிட்ட மிக அதிக மதிப்பிலான திட்டங்களை மறுஆய்வு செய்யும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். நாட்டின் நீண்டகால கடன் தொகையை அதிகரிக்கும் திட்டங்களை ரத்து செய்யவும் தயங்காது என்றார். நஜிப்பின் ஒப்பந்தங்கள் குறித்து மறுஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.

”  நிறைய திட்டங்கள் தவறான மற்றும் தேவையில்லாதது. நாம் மீண்டும் கலந்தாலோசனை செய்வோம். நாம் சில திட்டங்களை, இழப்பீடு தொகை கொடுக்க நேரிட்டாலும் ரத்து செய்ய வேண்டும், ஏனெனில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் ரிம 200 பில்லியன் கடனை எதிர் நோக்க நேரிடும்,” என்று கோலா லம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன எஸம்லி மண்டபத்தில் நடைபெற்ற ‘சீன நாட்டின் முதலீடு நன்மை பயக்குமா?” விவாத மேடையில் கூறினார்.

மேலும் விவரிக்கையில், மகாதீர் கிழக்குக்கரை இலகு இரயில் திட்டம் நாடு 50 ஆண்டுகளுக்கு கடனாளியாகி பொது மக்களை பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்றார்.

#கேஜிஎஸ்


Pengarang :