NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் ‘புரோட்டன் பாரு’வை தொடங்க துன் மகாதீர் விருப்பம்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 25:

மலேசியா நாட்டின் வாகனங்கள் உற்பத்தி தொழில் துறையில் முன்னணி நிறுவனத்தின் தந்தையான துன் டாக்டர் மகாதீர் முகமட், சீன நிறுவனமான கீலி ஆதிக்கம் செலுத்தும் புரோட்டோனுக்கு பதிலாக புதிய நிறுவனம் தொடங்கப்படும் என்று கூறினார். இத்திட்டம் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை 14-வது பொதுத் தேர்தலில் கைப்பற்றும் நிலையில் நிறைவேற்றப்படும் என்றார்.

”   நம்மிடையே புரோட்டோனில் இருந்து வெளியாகிய தொழில் நுட்ப நிபுணர்கள் உள்ளனர். இவர்களைக் கொண்டு புதிய வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடங்கி விடலாம். எல்லா தொழில் நுட்ப நிபுணர்களும் இருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பம் கொண்டு காரை உற்பத்தி செய்யலாம்,” என்று தெரிவித்தார்.

கோலா லம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன எஸம்லி மண்டபத்தில் நடைபெற்ற ‘சீன நாட்டின் முதலீடு நன்மை பயக்குமா?” விவாத மேடையில் பேசினார்.

#கேஜிஎஸ்


Pengarang :