SELANGOR

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக கண்காட்சி, ஆசியான் வட்டாரத்தின் முதலீட்டு நுழைவாயில்

ஷா ஆலம், செப்டம்பர் 7:

சிலாங்கூர் மாநிலம், ஆசியான் வட்டாரத்தின் முதலீட்டு நுழைவாயிலாக செயல்படும் ஆற்றல் கொண்டது. இது மாநில அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடு வாய்ப்புகளை உருவாக்கும் செயல்பாடுகளில் வெளிப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். செதியா சிட்டி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்த முயற்சியின் மூலம் இது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்றார். இந்த நன்முயற்சி மாநில அரசாங்கம் அந்நிய முதலீடு வாய்ப்புகளை கவர்ந்து இழுக்க உறுதுணையாக இருக்கும்.

SIBS 4

 

 

 

 

 

”   இந்த தடவை ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். ‘இன்வெஸ்ட் சிலாங்கூர்’ இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வர்த்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது மாநில பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக இருக்கும். வர்த்தக கண்காட்சி ஏற்பாடுகள் சிலாங்கூர் மாநிலத்தை வட்டார பொருளாதார நுழைவாயிலாக உருவெடுக்க வழி வகுக்கும். மேலும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக கண்காட்சி ஏற்பாடுகளின் மூலம் சிலாங்கூர் மாநிலம், ஆசியான் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் உலக நாடுகளில் மத்தியிலும் முதலீடு செய்ய சிறந்த இடமாக உள்ளது என்று நான் நம்புகிறேன்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, அனைத்துலக கண்காட்சி செப்டம்பர் 7 தொடங்கி 17 வரை நீடிக்கும் என்றும் அதில் ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கம், ஸ்மார்ட் & கிரீன் சிட்டி கருத்தரங்கம் மற்றும் மின்னணு வர்த்தக கருத்தரங்கம் போன்ற மூன்று பிரிவுகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SIBS
MB INVEST SEL 1 MB INVEST SEL SIBS 3 SIBS 1


Pengarang :