NATIONALRENCANA PILIHAN

சைபூடின் தனது பதவி ராஜினாமாவை மறுத்தார், புரளியை கிளப்பியவரை மன்னித்தார்

ஷா ஆலம், செப்டம்பர் 7:

கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர், டத்தோ சைபூடின் நசூதியோன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வந்த செய்தியை மறுத்தார்.  தாம், கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் பாஸ் கட்சியுடனான பேச்சு வார்த்தை தொடர்பில் வெளியிட்ட செய்தியினால் அதிருப்தி அடைந்த விட்டதாக புரளியை கிளப்பி விட்டுள்ளனர் என்றார்.

”   இந்த செய்தியின் அடிப்படையில் என்னை பலர் கண்டித்தனர். ஆனாலும், இது கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சி ஆகும். கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். நான் பதவியை ராஜினாமா செய்த செய்தியில் உண்மையில்லை. இந்த பரபரப்பான செய்தியை வெளியிட்டு குளிர் காய்ந்து வரும் நபர்களை நான் மன்னித்து விட்டேன்,” என்று கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலை சந்தித்த பிறகு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :