SELANGOR

சிலாங்கூர் திவால் ஆகும் என்ற எண்ணத்தை அம்னோ மறந்து விடலாம்

ஷா ஆலம், செப்டம்பர் 11:

2008-இல் மாநில அரசாங்கத்தை பாக்காத்தான் கைப்பற்றியதும் அம்னோ தலைவர்கள் சிலாங்கூர் திவால் ஆகிவிடும் என்ற கூற்று வெறும் மக்களை பயமுறுத்தும் நடவடிக்கையே என்று முன்னாள் பேங்க் நெகாராவின் துணை கவர்னர் டாக்டர் ரொஸ்லி யாக்கோப் கூறினார். இரண்டு தவணைகளில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கும் பாக்காத்தான் மாநில அரசாங்கம் தொடர்ந்து மேம்பாடு அடைந்த மாநிலமாகவும் குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நிலையில் உள்ளது மட்டுமில்லாமல் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முதல் இடம் பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்றார்.

”   இஃது வெறும் அரசியல் வார்த்தைகள் மட்டுமே. திவால் ஆகும் மாநிலங்களில் பட்டியலில் சிலாங்கூர் கண்டிப்பாக இருக்காது மாறாக உண்மையில் சொல்லப் போனால் திவால் ஆகும் நிலையில் உள்ள மாநிலம் பெர்லிஸ். பாக்காத்தான் ஆளும் சிலாங்கூர் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு பொருளாதார நிலைத்தன்மையில் முதலிடம் வகிக்கிறது. இந்த இரண்டு தவணைகளில் சிலாங்கூர் தொடர்ந்து மேம்பாடு அடைந்து வருகிறது. திறன் மிக்க நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, வெளிப்படையான மற்றும் நேர்மையான நிதி நிர்வாகம் போன்ற கூறுகள் சிலாங்கூர் மாநிலத்தை பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Dr-Rosli-Yaakop

 

 

 

 

 

 

 

மேலும் விவரிக்கையில், சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில அரசாங்கங்கள் சிறந்த பொருளாதார மற்றும் மேம்பாடு அடைந்த நிலையில் பாக்காத்தான் மத்திய அரசாங்கத்தை  நிர்வகிக்கும் திறன் கொண்ட தலைவர்களை கொண்டுள்ளது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :