Kastam Diraja Malaysia membuat lebihan bayaran tuntutan GST bagi 2019 berjumlah RM4.38 juta.
NATIONAL

ஜிஎஸ்டி பொதுத் தேர்தலுக்கு பிறகு 10% ஆக உயரும்?

ஷா ஆலம், செப்டம்பர் 23:

தேசிய முன்னணி அரசாங்கம், தொடர்ந்து 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தால் பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்தும் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வர் கூறினார். பிரதமரான டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் தேசிய முன்னணி அரசாங்கம் கண்டிப்பாக 10% ஆக உயர்த்தும் என்றார்.

”   அரசியல் பெண்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று என்று கூற வேண்டாம்.  சந்தைக்கு சென்றால், எல்லா பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. யாரை குறை கூறுவது? ஜிஎஸ்டியை முடிவு செய்யும் அரசியல் தலைவரை தான் நாம் குற்றம் சாட்டமுடியும். தற்போது 6% ஆக இருந்து வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள், நஜிப் அடுத்து வெற்றி பெற்ற பிறகு 20% ஆக உயர்த்துவதால்,” என்று சீனார் ஹாரியான் நாளிதழிலுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

izzah

 

 

 

 

 

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் பொருட்களின் விலை இறங்கும் என்ற தேசிய முன்னணி அரசாங்கத்தின் கூற்று முற்றிலும் தவறானது என்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுகளின் படி 12 பொருட்களில் 8 விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

”   பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் முக்கிய கொள்கைகளில் ஜிஎஸ்டியை நீக்குவது மற்றும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகரிப்பது போன்றவை அடங்கும் என்றார் அவர்.

#கேஜிஎஸ்


Pengarang :