Uncategorized @ta

சட்ட விரோத கடைகளை எம்பிபிஜே உடைத்தது

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 20:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) மற்றும் பெட்டாலிங் மாவட்ட காவல்துறை தலைமையகம் இணைந்து ஐந்து சட்ட விரோத கடைகளை நேற்று இடித்துத் தள்ளினர். எம்பிபிஜேவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் நேற்று காலை 7.30 மணி தொடங்கி 10.30 மணி வரை நடந்த இந்த அதிரடி நடவடிக்கை சுங்கை வே மெந்தாரி கோர்டில் நடந்த என்று தெரிவித்தது.

‘ஓப்ஸ் ரோபோ’ ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இரண்டு உணவகங்கள், ஒரு மளிகைக் கடை, ஒரு முடித் திருத்தும் கடை மற்றும் ஒரு கார் கழுவும் இடமும் எம்பிபிஜேவின் அமலாக்க பிரிவினரால் உடைக்கப்பட்டது. மேற்கண்ட சட்ட விரோத கடைகள் மாநில அரசாங்கத்தின் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடைகள் மலேசியர்களின் பெயரில் இருந்தாலும் வங்காளதேசிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள் என்று எம்பிபிஜேவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சிலாங்கூர் குடிநீர் நிறுவனம் (ஷாபாஸ்), தேசிய மின்சார நிறுவனம் (டிஎன்பி), பெட்டாலிங் நிலையில் மற்றும் மாவட்ட அலுவலகம் மற்றும் மாநில நில மற்றும் கனிம அலுவலகம் ஆகியவை பங்கேற்றனர்.

#கேஜிஎஸ்


Pengarang :