Uncategorized @ta

மலேசிய ஊழல் ஒழிப்பு வாரியத்தின் தலைவர் வாய் திறக்க வேண்டும்

கோலாலம்பூர்,அக் 24:

பாலி இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டதாக வெளியாக வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோவில் இருப்பது யார் எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில் அதில் இருப்பது மலேசிய ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு வாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ சூல்கிப்ளி அமாட்தான் எனும் கருத்துரைப்பிற்கு அவர் விரைந்து பதில் அளிக்க வேண்டும் என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் கோரிக்கை விடுத்தார்.

அவர் மீது ஐயத்தை ஏற்படுத்தியிருக்கும் அந்த வீடியோ பதிவேற்றம் குறித்து அவர் வாய் திறக்காமல் இருப்பது சரியான ஒன்றல்ல.அஃது பொறுப்பற்ற தனமும் கூட என கூறிய கோபிந்த் சிங் டான்ஸ்ரீ சூல்கிப்ளி சம்மதப்பட்ட வீடியோ குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சம்மந்தப்பட்ட வீடியோவில் இருப்பது நான் தான் அல்லது நான் இல்லை என்பதை விளக்க அவர் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட கோபிந்த் சிங் இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க டான்ஸ்ரீ சூல்கிப்ளி வெளிப்படையான விளக்கம் அளித்தல் அவசியம் என்றார்.

அவரது பெயருக்கும் வாரியத்தின் பெயருக்கும் எவ்வித மாசும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவர் முன் வர வேண்டும்.
அரசாங்கத்தின் எந்தவொரு இலாகாவும் வாரியமும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கும் சூழலை உருவாக்கிடக் கூடாது.அது குறித்து கேள்வி எழுப்புதலும் எங்களின் கடமையே.மலேசிய ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு வாரியம் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதால் இது குறித்து கேள்வி எழுப்பும் தன்மை நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்மதப்பட்ட வாரியத்தின் தலைவர் பொறுப்பு என்பது மிகவும் சிறப்பிற்குரிய ஒன்று. அந்நிலையில், அம்மாதிரியான உயரிய பதவி வகிக்கும் ஒவ்வொருவரும் முன்மாதியாக திகழ்வதே சிறப்பு என்றும் கோபிந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த வாரம் அடுத்தவரின் மனைவியோடு உறவு வைத்திருப்பது போல வீடியோ ஒன்று வெளியானது குறித்து கோபிந்த் சிங் இவ்வாறு கூறினார்.


Pengarang :