NATIONALUncategorized @ta

வரவு செலவு 2018: வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும்

கோம்பாக், அக்டோபர் 25:

மக்கள் வீடமைப்பு திட்டம் எதிர் வரும் நவம்பர் 3-இல் தாக்கல் செய்யப்படும் சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய அம்சமாக திகழும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். குறைந்த மட்டும் நடுத்தர வருமானம் ஈட்டும் மக்கள் வீடுகளை வாங்குவதற்கு புதிய திட்டங்களை மாநில அரசு தீட்டி உள்ளதாக தெரிவித்தார். மக்கள் வாங்கக்கூடிய விலையிலும் மற்றும் பொருத்தமான இடத்தில் உள்ள வீடமைப்பு பகுதியில்  வாங்குவதற்கு  மாநில அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றார்.

”  சிலாங்கூர் மாநில மக்கள் மட்டுமில்லை, வெளி ஊர்களில் இருந்து இங்கு வந்து பணிபுரியும் மக்களும் அதிகரித்து வருகிறது. ஆக, மாநில அரசாங்கம் எல்லா மக்களும் வீடுகளை வாங்குவதற்கு புதிய திட்டங்களை அல்லது முயற்சிகளை எடுத்து வருகிறது,” என்று கோத்தா புத்ரியில் ‘சிலாங்கூர்கூ’ இடாமான் பிகேஎன்எஸ் வீடமைப்பு திட்டத்தில் 10 வீட்டு உரிமையாளர்களுக்கு சாவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் சிறந்த பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து செயல்படுத்தி வரும் என்று உறுதியாக கூறினார். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இருந்தாலும் மக்களுக்காக சேவை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

#கெஜிஎஸ்


Pengarang :