NATIONALUncategorized @ta

நஜீப், மக்கள் நலன் மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்தார்

கோலா லம்பூர், அக்டோபர் 25:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் நிர்வாகத்தின் கீழ் நாடு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, பொது மக்களின் வாழ்வியல் பார்க்கப்படுகிறது என்று மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். நஜீப் தலைமைத்துவத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலன் போன்றவை எந்த முறையிலும் மேன்மை பெறவில்லை என்பது தான் உண்மை.

முன்னாள் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மனைவியான வான் அஸிஸா மேலும் பேசுகையில், அரசியல் நிலைத்தன்மை மிக மோசமான சூழ்நிலையில் இருப்பதும் மற்றும் புத்ரா ஜெயாவின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டது போன்றவை நஜீப்பின் வீழ்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாக ஆகிவிடும் என்றார்.

 

 

 

 

 

 

”  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி இனம் மற்றும் மதம் சம்பந்தப் பட்ட அரசியல் சித்தாந்தங்களை கடந்து மலேசியர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கும்,” என்று விவரித்தார்.

மலேசிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த தைரியமும் விவேகமும் கொண்டு செயல் பட வேண்டும் என்றார். மலேசியா, ஊழலற்ற மற்றும் நேர்மையான அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். வான் அஸிஸா பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சார்பில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

#கெஜிஎஸ்

=EZY=


Pengarang :