Uncategorized @ta

மந்திரி பெசார்: தோல் அகற்றியதால், சாதனையாளர் போல் நடந்துக் கொள்ள வேண்டாம்

ஷா ஆலம், அக்டோபர் 28:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பெடரல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்து தீகா மற்றும் சுங்கை ராசா தோல் சாவடிகளை நீக்குவதாக அறிவித்த நடவடிக்கையை தொடர்ந்து சாதனையாளர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தற்போதைய அறிவியல் தொழில்நுட்பத்தில், நாட்டு மக்கள் இந்த தோல் சாவடிகளின் ஒப்பந்தம் 2018-இல் முடிகிறது என்று தெரிந்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

நஜீப் பெடரல் நெடுஞ்சாலை தோல் சாவடிகளை நீக்குவது என்று அறிவித்து மக்களை குழப்புவதோடு மட்டுமில்லாமல் ஏமாற்றும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”   இந்த விடயத்தில் நான் பெருமை கொள்ளவில்லை, மாறாக மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அவர்களின் தொடர்ந்து நடத்திய போராட்டத்தில் இறுதியில் இன்று தோல் சாவடிகளை நீக்கி இருக்கிறார் நஜீப். மத்திய அரசாங்கம் மலேசியாவில் உள்ள எல்லா இடங்களிலும் அமைந்துள்ள தோல் சாவடிகளை நீக்க வேண்டும். ஏனெனில், தோல் நிறுவனங்கள் பன்மடங்கு லாபத்தை அடைகிறது,” என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

#வீரத் தமிழன்

 


Pengarang :