SELANGORUncategorized @ta

மோசடிகள் எதுவும் நடக்கவில்லை, ஆட்சிக் குழு உறுப்பினர் காவல்துறையில் புகார் செய்யுமாறு சுலைமானுக்கு சவால்!!!

ஷா ஆலம், நவம்பர் 7:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், சுங்கை யூ நில விவகாரத்தில் எந்த ஒரு மோசடிகளும் நடக்கவில்லை என்று சிலாங்கூர் மாநில தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் ஆகிய நிரந்தர குழுக்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் சட்டசபையில் இன்று தெரிவித்தார். பெர்மாத்தாங் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ சுலைமான் அப்துல் ரசாக் மாநில பாக்காத்தான் தலைவர்களுடன் சம்பந்தப்படுத்தி இந்திய சமுதாயத்திடம் மலிவு விளம்பரம் தேடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று சாடினார்.

மேலும் சிலாங்கூர் சட்ட மன்றத்தில் பேசுகையில், கணபதி ராவ் சுலைமான் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை மற்றும் இது வெறும் கற்பனையே என்று விவரித்தார்.

”   அப்படி நிலம் பெற்றுள்ளவர்களின் விவரங்கள் மாற்றப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தால் உடனடியாக சுலைமான் காவல்துறையிடம் புகார் கொடுக்க வேண்டும். மேலும் எழுத்துப்பூர்வமாக சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பினால் , நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். இந்த நில விவகாரத்தில் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைகளை கையாள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. என்னை சம்பந்தப்படுத்தி பேசிய சுலைமான் நடவடிக்கையில் எனக்கு திருப்தி இல்லை. ஆக, இந்த பிரச்சினையை செல்கேட்-க்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறேன்,” என்று சிலாங்கூர் சட்ட மன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

#வீரத் தமிழன்


Pengarang :