SELANGORUncategorized @ta

எம்பிபிஜே, குப்பைகளை அகற்றும் நிர்வாகத்தில் தென் கொரியா தொழில்நுட்பத்தை அமல்படுத்த ஆய்வுகள்!!!

ஷா ஆலம், நவம்பர் 15:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) தென் கொரியா நாட்டில் அமல்படுத்தி வரும் நவீன மற்றும் விவேக குப்பைகளை அகற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யும் என்று தெரிவித்தது. இந்த விவரத்தை எம்பிபிஜே-வின் பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு நிர்வாக பிரிவின் துணை இயக்குனர் மாஸூரா முகமட் அமீன் கடந்த நவம்பர் 13-இல் எம்பிபிஜே குழுவிற்கு தலைமை ஏற்ற பிறகு சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார். எம்பிபிஜே குழுவினரை அசான் நகரின் நகர நிர்வாக இலாகாவின் இயக்குனர் ருயூ ஜி வோன் எதிர் கொண்டு வரவேற்றார்.

எம்பிபிஜே தனது அறிக்கையில், மேற்கண்ட வருகை, தென் கொரியாவில் மிகச் சிறந்த முறையில் குப்பைகள் அகற்றும் நிர்வாகம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் அந்த நிர்வாக பின்னணியை அடையாளம் காண வேண்டும் என்று தெரிவித்தது.

#வீரத் தமிழன்


Pengarang :