NATIONAL

சிலாங்கூரின் இலவச குடிநீர் சேவை வரட்சி காலத்திலும் தொடரும்

பகாங், நவம்பர் 19:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து இலவச குடிநீர் சேவையை வழங்கி வரும் இது மாநில மக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய மகளிர் அணி துணைத் தலைவர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். மாநில அரசாங்கம் ரிம 180 மில்லியனை இலவச குடிநீர் சேவைக்கு செலவிட்டுள்ளது என்றார்.

” கோடை காலத்திலும் சிலாங்கூர் வாழ் மக்களுக்கு இலவச சேவை தொடரும். மத்திய அரசாங்கம் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தினாலும், சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜிஎஸ்டி வரி, தோல் கட்டணம் மற்றும் பொருட்கள் விலை ஏற்றம் போன்றவைகளை மத்திய அரசாங்கம் தொடர்ந்து திணித்து வருகிறது. பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) விரிவாக்கம் மூலம் சிலாங்கூர் மக்கள் நல்ல பயன்களை பெற்றுள்ளார்கள்,” என்று மெந்தகாப் பத்து காப்போரில் நடந்த ‘மக்களின் மீது அக்கறை, சூறாவளி பயணம் ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசினார்.

#வீரத் தமிழன்


Pengarang :