SELANGOR

ரிம்பா ஜெயாவில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

ஷா ஆலம், நவம்பர் 19:

ரிம்பா ஜெயா குடியிருப்பு பகுதி தீபாவளி மற்றும் மக்களுடனான களந்துரையாடல் நிகழ்வு மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ரோட்சியா இஸ்மாயில் அவர்கள் களந்து கொண்டு அதிகாரபூர்வமாக துவக்கி வைத்தார். இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த ரிம்பா ஜெயா இந்திய சமூக தலைவர் திரு ஆர் தி சரவணன் , பெர்கிஸா மற்றும் ஷா அலாம் மக்கள் நீதி கட்சி உறுப்பினர்கள், நம்பிக்கை கூட்டனி உறுப்பினர்கள், ஷா அலாம் வட்டார இந்திய சமூக தலைவர் குமரவேல் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய மாண்புமிகு யகோப் சபாரி அவர்களின் சிறப்பு அதிகாரி திரு எஸ் பி சரவணன், சிலாங்கூர் மாநில அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் தொட்டு விளக்கமளித்தார். குறிப்பாக, சிலாங்கூர் மாநில அரசு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள “கிஸ்” அட்டை அதாவது மாதம் 2000 ரிங்கிட்ர்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சார்ந்த தாய்மார்களுக்கு மாதம் 200 விகிதம் உணவு பொருட்கள் வாங்குவதற்கான அட்டை ஜனவரி 2018 துவங்கி பயண்பாட்டிற்கு வரவிருப்பதாகவும் இதன் பதிவு பாரங்கள் வந்தவுடன் குறைந்த வருமானம் ஈட்டும் இந்திய குடும்பங்களை பதிவதிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த திட்டம் சிலாங்கூர் முழுவதும் சுமார் 30,000 பேருக்கு சென்று சேரும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆகவே தகுதி பெறும் இந்திய தாய்மார்கள் முன்வந்து பதிவு செய்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் இது போன்ற இந்திய சமூக நிகழ்வுகளை இன பேதமின்றி என்றும் பெரும் ஆதரவினை வழங்கி வரும் ஷா அலாம் மக்கள் நீதி கட்சி தொகுதி தலைவர் மாண்புமிகு யகோப் சபாரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த திரு ஆர் தி சரவணன் மற்றும் அவர்தம் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

தகவல்:

ஆர் தி சரவணன்
ரிம்பா ஜெயா இந்திய சமூகத் தலைவர்


Pengarang :