Ahli Parlimen Bangi, Ong Kian Ming bercakap kepada media selepas lawatan ke kilang Ligno Biotech Sdn Bhd di Perindustrian Balakong Jaya, Balakong pada 22 Jun 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
MEDIA STATEMENTNATIONAL

மலாய் வேட்பாளரை நிறுத்திய பின் முடிவு மசீச வுக்கு  இருதலைக் கொள்ளி எறும்பு நிலை என்கிறார் முன்னாள் எம்.பி

பெட்டாலிங் ஜெயா  ஏப்ரல் 28 : பெர்சத்துவின் மலாய் வேட்பாளரை நிறுத்த பெரிக்காத்தான் நேஷனல்  எடுத்த முடிவு, கோல குபு பாரு இடைத்தேர்தலை MCA புறக்கணிப்பது  என்ற நிலைக்கு  எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் டி ஏ பி   எம்.பி. ஓங் கியான் மிங், கருதுகிறார்.

பெரிக்காத்தான்  முடிவு, மாநில சட்டமன்ற  தொகுதிக்கான பிரச்சாரத்தில் MCA இல்லாதை சீன வாக்காளர்களால் உணர முடியாது என்று  அவர் கூறினார்.

சீன வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை பெருமளவில் ஆதரிப்பார்கள், ஆக இந்த பிரச்சாரத்தில் ம சீ சாவின் நிலை பொருத்தமற்றது  என  முன்னாள் பாங்கி எம்பியுமான அவர் கூறினார்.

மேலும் கூறுகையில், MCA தலைவர் வீ கா சியோங் வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவின் நியாயப்படுத்தல் சீன நாளிதழ்களில்  தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. ஆனால்  மசீச வின்  பாரம்பரிய  தொகுதியில்  பெரிக்காத்தான்  ஒரு மலாய் வேட்பாளரை நிறுத்தியது,   அதைவிட  பெரிய அலையை சீனர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

“இந்த இடைத்தேர்தலில் சீன வாக்காளர்கள் வாக்களிக்க வெளியே வர வேண்டாம் என்று சமிக்ஞை செய்வதற்கான ஒரு வழியாக அதன் சொந்த புறக்கணிப்பைப் பயன்படுத்துவது MCA இன் உத்தியாக இருந்தால், இது வேலை செய்யப் போவதில்லை என தாம் நினைப்பதாக கூறினார். “சீன வாக்காளர்களின் எண்ணிக்கை குறையும் ஆனால் MCA வின் புறக்கணிப்பு காரணமாக அல்ல,” என்று அவர் கூறினார்.

பெரிக்காத்தான் கைருல் அஸ்ஹாரி சவுத், நான்கு முனை போட்டியில் பக்காத்தான்  இருக்கையை கைப்பற்ற முயற்சிப்பார், இதில் DAP இன் பாங் சாக் தாவ், பார்ட்டி ராக்யாட் மலேசியாவின் ஹபிசா ஜைனுதீன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஙியோவ் கெ சின் ஆகியோரும் உள்ளனர்.

மே 11 இடைத் தேர்தலுக்கு முன்னதாக, தனது கட்சிக்கு எதிராக டிஏபி நடத்திய முந்தைய தாக்குதல்களை மேற்கோள் காட்டி, ஐக்கிய அரசாங்க பிரச்சாரத்திற்கு MCA உதவாது என்று வீ முன்பு கூறியிருந்தார். ஆனால்  இன்று  ம.சீ.ச  இருதலைக் கொள்ளி எறும்பு நிலையாகிவிட்டது.


Pengarang :