கோலா லம்பூர், நவம்பர் 21:
தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ புங் மொக்தார் ராடின் மலேசிய நாட்டு மகளிரை காம உணர்வோடு பேசி இருப்பதை கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சீ கடுமையாக கண்டித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது புங் மொக்தார் ராடின் மகளிரை சுட்டிக்காட்டி ‘நிர்வாணக் கோலம்’ என்று எடுத்துரைத்த கூற்று முற்றிலும் கேவலப்படுத்தும் செயல் என்றார்.
மேலும் சொன்னால், கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான புங் மொக்தார் ராடினின் மகளிரை அவமதிக்கும் செயல் இது முதல் முறையல்ல என்று வன்மையாக சாடினார். இந்த விடயத்தில் மகளிரிடம் புங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
#வீரத் தமிழன்