NATIONAL

கெஅடிலான் கட்சியின் நிகழ்ச்சியை ஜோகூரில் தடுப்பதன் மூலம், அம்னோ-பிஎன்-க்கு நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை காட்டுகிறது

ஜோகூர், நவம்பர் 26:

தெப்ராவ் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள டேசா முத்தியாரா மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (பிபிஆர்) நடைபெற்ற நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி எடுத்த அம்னோ தேசிய முன்னணியின் நடவடிக்கையின் மூலம் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்றி சாதனை படைத்து விடுவோம் என்ற கலக்கம் அந்தக் கட்சியினருக்கு வந்து விட்டது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மக்களுக்கு மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்து விட்ட நிலையில் நாட்டின் தேசிய முன்னணியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது என்றும் அனைத்து மக்களும் எண்ணம் கொண்டு இருக்கின்றனர் என்று விவரித்தார்.

”  கட்சியின் கொடி மற்றும் எனது படங்களை கொண்ட பதாகைகள் அபகரிக்கப் பட்டுள்ளது. ஜோகூர் மாநிலத்தில் இது தான் மக்களாட்சி நடைமுறையோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது? நான் கொள்ளைக்காரனோ அல்லது கொலைகாரனோ இல்லை, மாறாக இந்நாட்டின் குடிமகன். ஏன் என்னைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டும்? என்று தெப்ராவ் நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

 

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின் அலி அறிவித்தார் நிகழ்ச்சி டேசா முத்தியாரா பிபிஆர் குடியிருப்பு பகுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் ஒரு தலைவர் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளை கண்டறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு, ஆனால் அரசியல் சித்தாந்தங்களினால் இது தடுக்கப்பட்டது என்றார்.

கெஅடிலான் கட்சி நாட்டில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கட்சிகள் தற்போது சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

#வீரத் தமிழன்


Pengarang :