NATIONAL

ஐபிஆர் திட்டங்களின் வெற்றியை தொடர்ந்து அம்னோ-பிஎன் பின்பற்ற தொடங்கி விட்டது

ஜோகூர், நவம்பர் 27:

பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெற்றதால் அம்னோ தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் மற்றும் அதன் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பின்பற்றத் தொடங்கி விட்டது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தமது கட்சியினர் அம்னோ தேசிய முன்னணியின் இந்த  நடவடிக்கையை வரவேற்கிறது, ஏனெனில் இதன் மூலம் மலேசிய மக்கள் அனைவரும் பலன் அடைவார்கள் என்றார்.

”  பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது 2018-இன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது, சிலாங்கூர் மாநிலத்தின் திட்டங்களை பின்பற்றி அறிவித்தார். புதிய பிறந்த குழந்தைகள் திட்டம் நாம் ‘தாவாஸ்’ என்று அழைக்கிறோம், அவர் இதை மாற்றி ‘அடாம்50’ என்று பெயரிட்டார். சிலாங்கூரின் ‘பிரேன் பேங்க்’ காப்பியடித்து ‘மைபிரேன்’ என்று அழைக்கிறார். மேலும் ஓஆர்ஸ் திட்டத்தையும் பின்பற்றி உள்ளார்.  இப்படி நம்மையே பின்பற்றி இருப்பதை விட, நாமே புத்ரா ஜெயாவில் உட்கார்ந்து விட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும்,” என்று பத்து பஹாட் பெங்காரங்கில் நடைபெற்ற சூறாவளி பயணம நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இப்படிக் கூறினார்.

இரண்டு நாட்கள் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்ற சூறாவளி பயணத்தில் கெஅடிலான் கட்சியினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :