NATIONAL

ஜாசாவின் இயக்குநருக்கு ஏன் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்?

கோலா லம்பூர், நவம்பர் 27:

சிறப்பு விவகாரத்துறை இலாகாவின் (ஜாசா) தலைமை இயக்குநருக்கு ஏன் மாதத்திற்கு ரிம 20,592 சம்பளம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கேள்வி எழுப்பினார். ஜாசாவின் தலைமை இயக்குநரின் சம்பளம் தொலைத்தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சரின் சம்பளமான ரிம 14,907.20 விட மிக அதிகம் என்று தெரிவித்தார்.

மேலும் வான் அஸிஸா 272 ஜாசா அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ள ரிம 12.8 பில்லியனை பற்றியும் கேள்வி எழுப்பினார். ஜாசாவின் வேலை, அம்னோ தேசிய முன்னணிக்கு பரப்புரை செய்வது மட்டுமே என்று விவரித்தார். ஆக ஜாசாவின் சம்பளம் அம்னோ தலைமையகமே வழங்க வேண்டும் என்றும் மக்களின் வரிப்பணம் மூலம் அல்ல என்று சாடினார்.

#தமிழ் அரசன்


Pengarang :