NATIONAL

அன்வார் விடுதலைக்கு முன் புதிய அவதூறு தயாராகி விட்டது!!!

பேங்க் நெகாராவின் அந்நிய செலாவணி மோசடி தொடர்பில் அரச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்ந்து அன்வார் இப்ராஹிம்மை சிறையில் அடைக்கப்பட எடுத்த முயற்சி என்றே தெரிகிறது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமை ஆலோசகரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த பிப்ரவரி 10, 2017-இல் இருந்து அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். எதிர் வரும் ஜூன் 10, 2018-இல் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிடுவார்.

ஆனாலும், டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தலைமையிலான அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் தவணைக் காலம் ஆகஸ்ட் 2018-இல் முடிகிறது. இதில் குறிப்பாக சொன்னால், 14-வது பொதுத் தேர்தல் ஜூன் 2018-க்கு முன்பு நடத்தப்படவில்லை என்றால் நஜீப் மற்றும் அம்னோ தேசிய முன்னணி விடுதலை அடைந்த  அன்வாரின் மறுமலர்ச்சி சூறாவளியை சந்திக்க நேரிடும்.

ஆக, 1எம்டிபியை தவிர்க்க, வாழ்க்கை செலவினங்களை மக்கள் மறக்க மற்றும் அன்வார் இப்ராஹிம்மை மீண்டும் சிறையில் வைக்க ஒரு புதிய அவதூறு வழக்கு தயாரிக்க பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே அம்னோ தேசிய முன்னணி தனது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையைக் மேன்மை தங்கிய மாமன்னருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பினாலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதில் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடைசி நாளில் அறிக்கை கொண்டு வரப்பட்டது. இதை விட பெரிய கொடுமை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது ஆகும்.

அன்வார் இப்ராஹிம் ஒரு அரசியல் கைதி என்று அனைத்து உலக அரசு சாரா நிறுவனங்களும் அறிவித்தது அனைவரும் தெரிந்த விஷயம். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் அவர்களே, முதிர்ச்சியாகவும் நீதியான முறையிலும் போட்டியிடுங்கள்!!!

# எட்ரியன் லிம் சீ என்

அன்வார் விடுதலை பிரசாரத் தலைவர்


Pengarang :