SELANGOR

எம்பிபிஜேவின் பிளாஸ்டிக் பை பயன்பாடு வேண்டாம் பிரச்சாரம் ரமலான் கடைகளில் வெற்றி

ஷா ஆலம், ஜூன் 23:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் ரமலான் கடைகளில் பொலிஸ்டிரின் பயன்பாடு குறைந்த நிலையில் இருப்பதாக அதன் மேயர் முகமட் அஸிஸி முகமட் ஜைன் கூறினார்.  இந்த செய்தி ரமலான் கடைகளில் பொருட்களை வாங்கும் பயனீட்டாளர்களிடையே நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது என்று விவரித்தார்.

மேலும் கூறுகையில், பை அல்லது கூடை எடுத்து வரும் பயனீட்டாளர்களின் செயல்பாடுகள் மாநில அரசாங்கத்தின் பிளாஸ்டிக் பை பயன்பாடு வேண்டாம் பிரச்சாரம் வெற்றி பெற்றதை காட்டுகிறது என்று கூறினார்.

azizi-mbpj

 

 

 

 

 

”    தாங்கள் நடத்திய கணக்கெடுப்பில் 2016-இல் நடந்த ரமலான் மாத கடைகளோடு ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் மற்றும் பொலிஸ்டிரின் பயன்பாடு மிகவும் குறைந்து பூஜ்யத்தை எட்டியது,” என்று மாநகராட்சி மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனிடையே மேலும் கூறுகையில், பெட்டாலிங் ஜெயா மக்கள் பொலிஸ்டிரின் பயன்பாடு வேண்டாம் என்ற கொள்கை முடிவை ஏற்று நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்த ஆண்டு எம்பிபிஜே உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ரமலான் கடைகளில் கை உறை பயன்படுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. கை உறை பயன்படுத்தும் நடைமுறை உணவு பொருட்கள் விற்பனையில் சுகாதார மற்றும் சுத்தமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

#கேஜிஎஸ்


Pengarang :