NATIONAL

மறுமலர்ச்சி அலை அம்னோ பிஎன்னின் கோட்டையை அதிரச் செய்யும்

பாசிர் கூடாங், ஜூலை 27:

பாக்காத்தான் ஹாராப்பான் புதிய கூட்டணி, அம்னோ தேசிய முன்னணியின் கோட்டையான ஜோகூரில் அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியை வழிநடத்தும் வல்லமை கொண்டுள்ளது என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உதவித் தலைவரான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். கூட்டணி கட்சிகளின் இடைவிடாத உழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறச் செய்யும் என்று உறுதியாக கூறினார்.

”   அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்த ஒத்துழைப்பு மிக அவசியம். ஜோகூர் மாநிலம் மற்றும் மற்ற மாநிலங்களும் வெற்றி பெற கூட்டணி கட்சிகள் கடுமையாக போராட வேண்டி இருக்கும். நாடாளுமன்றத்தை களைத்த பின் தேர்தல் நடந்தால், நம்மால் ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும்,” என்று கெஅடிலான் துணைத் தலைவருமான அஸ்மின் அலி தாமான் மாவாரில் நடந்த ஜோகூர் மாநில கெஅடிலான் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

 

IMG_5280

 

 

 

 

 

 

இதற்கு முன்பு, ஜோகூர் மாநிலம் அம்னோ கட்சியின் பிறப்பிடமாகவும் மலேசியாவில் உள்ள மாநிலங்களில் மிக பலமிக்க கோட்டையாகவும் கருதப்பட்டது. ஆனால் கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு அம்னோவில் நடந்த நெருக்கடியை தொடர்ந்து சட்ட மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது. பிரிபூமி பெர்சத்து கட்சியின் வருகை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, புதிய கருத்துக்கணிப்பில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மேலும் 15 சட்ட மன்றங்களில் வெற்றி பெற்று ஜோகூர் மாநிலத்தை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயத்தில், ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது அம்னோ தேசிய முன்னணிக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

#கேஜிஎஸ்


Pengarang :