SELANGOR

கோலா சிலாங்கூரின் வளர்ச்சி சரித்திரம் மற்றும் இயற்கை நிலைநிறுத்தப்படும்

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 28:

கோலா சிலாங்கூர் நகரம் சிலாங்கூரில் புதிய மேம்பாட்டு இடமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றது என்று கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் தலைவர் முகமட் அஸார் முகமட் அலி கூறினார். இந்த மாவட்டம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது என்றார்.

”   ஆனாலும், எந்த மேம்பாட்டு திட்டங்களும் சுற்று சூழலை சீரழிக்காமலும், சரித்திரம் மற்றும் சுற்றுலா தளத்திற்கு பாதகமாக இல்லாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும். பெட்டாலிங் ஜெயா மற்றும் ஷா ஆலம் போன்ற மாநகரங்களை போல் உருமாற்றம் பெற்றாலும் தனது அடையாளத்தை மறந்து விடக்கூடாது. கோலா சிலாங்கூர் ‘பாறை நகரமாக’ மாற்றம் காணக்கூடாது,”என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

kuala selangor

 

 

 

 

 

முகமட் அஸார் மேலும் கூறுகையில், புதிய பட்டிணங்களை உருவாக்கும் முயற்சியில் ‘விவேக மேம்பாடுகள்’ மீது கவனம் செலுத்தி சுற்று சூழல் பாதுகாப்புக்கு உறுதி படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#கேஜிஎஸ்


Pengarang :