NATIONAL

தமிழ்மலர் நாளிதழ் தாக்குதல், கெஅடிலான் கண்டனம்

கோலா லம்பூர், செப்டம்பர் 9:

கெஅடிலான் கட்சி மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தகவல் சாதனங்களின் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையை முற்றாக கண்டிக்கும் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் துணைத் தலைவர்  சிவராசா ராசயா இன்று தமிழ் மலர் அலுவலகத்தில் வருகை புரிந்து நேரிடையாக மேலாளர் சரஸ்வதி கந்தசாமியை சந்தித்து தெரிவித்தார்.

தமிழ் மலர் நாளிதழ் இந்திய சமுதாயத்தின் எல்லா தரப்பினரின் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. தேசிய முன்னணி மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் செய்திகளையும் சரிசமமாக பதிவு செய்யும் தமிழ் நாளிதழ் என்றால் அது மிகையாகாது. ஆகவே, தமிழ் மலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் திருப்தி இல்லை என்றால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நாளிதழ் பொறுப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் செயல் காட்டு மிராண்டிதனம் என்று கூறினார்.

சிவராசாவுடன், கெஅடிலான் உதவித் தலைவர்கள் நூருல் இஸா, தியான் சுவா மற்றும் பல கெஅடிலான் தலைவர்கள் தமிழ் மலர் நாளிதழுக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் மலர் நாளிதழ் சார்பில் சரஸ்வதி கந்தசாமி மற்றும் சுரேஷ் குமார் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தமிழ் மலர் நாளிதழின் செய்தியால் ஆத்திரமடைந்த துணையமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் அப்பத்திரிகையின் தலைமையகத்தில், இரு தரப்பினருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் துணையமைச்சர் சரவணனின் ஆதரவாளர்கள் அத்து மீறி நடந்து கொண்டதாகவும்,
அலுவலகத்தில் இருந்த ஓம்ஸ் தியாகராஜனை தாக்கியதாகவும் தடுக்கச் சென்ற மேலாளர் சரஸ்வதி கந்தசாமியையும் தாக்கியதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கு.குணசேகரன் குப்பன்

 


Pengarang :