SELANGOR

தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம் & ஆலயங்களுக்கு 17 லட்சம்

ஷா ஆலம், நவம்பர் 13:

மலேசியாவில் நமது அடையாளமாக நம்மின வரலாற்றினை தாங்கி நிற்கும் தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் தொடர்ந்து டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையில் சிலாங்கூர் மாநிலத்தில் தனித்துவ சிறப்பினை பெற்று வருவதை மறுத்திட முடியாது.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் இம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தனித்துவம் செலுத்தி வருவதோடு அதன் தேவைகளையும் அடிப்படை வசதிகளையும் நிறைவாகவே செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி,நில விவகாரங்களிலும் விவேகமான போக்கினை கடைபிடித்து நன் தீர்வினை ஏற்படுத்தி வருவதும் போற்றுதல்குரியது.
அவ்வகையில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவிடும் வகையில் மாநிலத்தின் 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 லட்சத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்தது பெருமிதமானது.இதன் மூலம் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து வளர்ச்சியினை நோக்கி பயணிக்கவும் மேம்பாடு மிக்க தமிழ்ப்பள்ளிகளாக உருமாற்றம் கொள்ளவும் வழிகோலும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றியது முதல் பல்வேறு ஆலயங்களுக்கு நிலப்பட்டா கொடுத்தது முதல் மாற்று நிலங்களை வழங்கியதிலும் தனித்துவமாய் விளங்கிடும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சமய ரீதியிலும் வேறுபாடு காட்டியதில்லை என்பதற்கு இஃது தக்க சான்று எனலாம்.
அவ்வகையில்,வரும் 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டினை தாக்கல் செய்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பல்லினமும் மதமும் இங்கு ஒன்றுதான்.அதில் வேறுப்பாடு இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆலயங்களுகளின் செயல்பாடுகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் வெ.17 லட்சத்தை ஒதுக்கீனார்.

இஃது விவேகமான ஒன்றாகவும் அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தை பல்லின மக்களிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் மேலும் ஒருமைப்பாடும் மிக்க மாநிலமாகவும் முன்னெடுத்து செல்லவும் இஃது பெரும் பங்காற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.நம்மினத்தின் வரலாற்று பெருமையாக கருதப்படும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த மந்திரி பெசார் சிலாங்கூர் மாநிலம் புரிந்துணர்வும் மதநல்லிணக்கமும் கொண்ட முதனைமையான மாநிலம் என்பதை மெய்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :