NATIONAL

பிலாஸ்டிக் 20 சென்: பிஎன் பசுமை திட்டத்தை அமுல்படுத்துவதில் தோல்வி !!!

ஷா ஆலம், பிப்ரவரி 19:

சிலாங்கூர் அம்னோ தேசிய முன்னணி கட்சியினருக்கு பசுமை  கொள்கைகள் அமல்படுத்த திட்டங்கள் எதுவும் இல்லை. இந்த பசுமை திட்டங்கள் வழி மாநில மக்கள் எதிர் காலத்தில் நன்மைகள் கிடைக்கும் என்று கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநில இளைஞர் அணியின் தொடர்பு பிரிவு தலைவர் முகமட் நகிப் நஸாரூடின் கூறினார். சிலாங்கூர் மாநில அரசு பசுமை திட்டங்களை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார். “பிளாஸ்டிக் பைகள் மற்றும் போலிஸ்டிரின் இல்லை” என்ற திட்டத்தின் மூலம் பசுமையான சூழ்நிலையில் வாழ்க்கை வாழ்ந்திட உறுதி செய்கிறது, ஆனாலும் சிலாங்கூரை கைப்பற்றி விடுவோம் என்று கூக்குரல் விடும் அம்னோ தேசிய முன்னணியும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் திட்டத்தை காப்பியடிக்கும் செயல் வெட்கப்பட வேண்டியது என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

 

” என்னை பொருத்தவரை, சிலாங்கூர் தேசிய முன்னணி எந்த ஒரு உருப்படியான திட்டங்கள் இல்லாத ஒரு கட்சி. சிலாங்கூர் மாநில மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதில் தோல்வி அடைந்த கூட்டணி. ஆகவே, சிலாங்கூர் மாநில மக்கள் தேசிய முன்னணியை புறக்கணிப்பு செய்ததுதான் சரி. ஆனாலும், சிலாங்கூரில் மட்டுமில்லாமல் நாட்டின் நன்மைகளை கருத்தில் கொண்டு எல்லா மாநில மக்களும் புறக்கணிக்க வேண்டும்,” என்று முகமட் நகிப் நஸாரூடின் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, எதிர் வரும் 14-வது  பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநில மக்கள் அம்னோ தேசிய முன்னணியை தேர்வு செய்தால் பிளாஸ்டிக் பைகளுக்கு 20 சென் செலுத்தும் திட்டம் ரத்து செய்யப்படும் என்று டான்ஸ்ரீ நோ ஓமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :