SELANGOR

வீடமைப்பு பகுதிகளில் டிங்கி ஒழிப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்!!

ஷா ஆலம் – டிங்கியிலிருந்து விடுப்படவும் அதனை முற்றாக ஒழிக்கவும் ஒவ்வொரு வீடமைப்புப் பகுதியிலும் டிங்கி ஒழிப்பு நடவடிக்கை குழுவினை அமைக்க வேண்டும் என மாநில சுகாதாரம்,சமூகநலன்,மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட் ஆலோசனை வழங்கினார்.
டிங்கியை முற்றாக ஒழிப்பதில் அரசு எஜென்சி தங்களால் இயன்ற ஆக்கப்பூர்வ பங்களிப்பையும் நடவடிக்கையினையும் மேற்கொண்ட போதிலும் பொது மக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் இல்லாமல் போனால் அஃது அதன் இலக்கை எட்டாது என்றும் கூறினார்.வீடமைப்பு பகுதிகளில் அடையாளம் காணப்படும் ஏடிஸ் கொசு உற்றபத்தி இடங்கள் மீது பொது மக்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.சுற்றுச்சூழல் தூய்மையும் பாதுகாப்பும் மிகவும் அவசியம்,அதனை பொது மக்கள் நன்முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில்,ஒவ்வொரு நாளும் பொது மக்கள் 10 நிமிடத்தை ஒதுக்கி தத்தம் வீடுகளையும் அதன் சுற்றுச்சூழல்களையும் தூய்மைப்படுத்துதல் அவசியமாகிறது.அதனை அன்றாட கடமையாக பொது மக்கள் செய்திடல் வேண்டும்,அவ்வாறு செய்வதன் மூலம் டிங்கிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து,டிங்கியை அதிகரிக்க விடாமல் செய்யவும் அதனை முற்றாக ஒழிக்கவும் அரசாங்கம் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது.மாறாய்,பொது மக்களும் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் களமிறங்க வேண்டும்.அதற்கு முதற்கட்டமாக ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் டிங்கி ஒழிப்பு நடவடிக்கை குழுவை அமைத்த காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்தினை நன்கு புரிந்துக் கொண்டு விழிப்புனர்வோடு செயல்பட்டால் நம் மாநிலமும் நாடு டிங்கியிலுருந்து முற்றாக விடுப்பட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :