NATIONAL

விஷதன்மை மது அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

புத்ராஜெயா :

விஷதன்மை கொண்ட மது அருந்தி  அன்மையில் 21 பேர் இறந்த வேளையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளி தெரிவித்தார்.இதற்கு முன்னர் 19ஆக் இருந்த அந்த எண்ணிக்கை மருத்துவமனைக்கு வெளியில் நிகழ்ந்த 2 மரணங்களோடு சேர்த்து 21ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் “grand royal whisky” மதுவில் உணவு சட்டம் 1983இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மெத்தனால் தன்மை கட்டுப்பாட்டில் இல்லை.அஃது அதிகமான நிலையில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி,சம்மதப்பட்ட மதுவில் தொழிற்சாலையின் பெயர்,முகவரி உட்பட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தகவல்களும் முற்றாக இல்லை  என்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.இது உணவு சட்டம் 1983 மற்றும் 1985க்கு முரணானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,சுகாதார அமைச்சு சம்மதப்பட்ட மதுபானம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக இருக்கும் பிற மதுபானங்கள் மீதும் விசாரணையும் ஆய்வும் மேற்கொள்ள நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.கடந்த செவ்வாய்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 291 மதுபானங்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

இந்நிலையை ஆராய்வதற்கும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் போலீஸ்,சுங்கைத்துறை,அகதிகளுக்கான ஐக்கிய  தேசிய உயர் ஆணையம் மற்றும் அந்நியநாட்டு தொழிலாளர்களின் முதலாளிகள் உட்பட வெளிநாட்டு தொழிலாளர் குத்தகை ஏஜெண்சிகள் ஆகியோருடன் ஒத்துழைக்கவும் அடுத்தக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவும் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக கூறினார்.

இதற்கிடையில்,அடையாளம் காணப்பட்ட பீர் வகையை சார்ந்த நிறுவனம் சுகாதார அமைச்சோடு சந்தித்து விளக்கம் அளித்திருப்பதாகவும் அருந்தப்பட்ட பீர் தரமானதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் அஃது போலியானது என்றும் சந்தேகிக்கப்படுகிறது.மேலும்,சம்மதப்பட்ட பீர் உண்மையானதா அல்லது அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சுகாதார அமைச்சு  ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.


Pengarang :