SELANGOR

சிலாங்கூர் குடிநீர் வளத்தை “ஓபாக்” மேம்படுத்தும்

ஷா ஆலம், மார்ச் 13-

பெஸ்தாரி ஜெயாவில் உள்ள குடிநீர் குளத்தை தூர் வாரும் பணியை (ஓபாக்) மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களுக்குத் தொடர்ச்சியாக குடிநீர் கிடைப்பதை இந்நடவடிக்கை உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை (ஓபாக்) வாயிலாக நாளொன்றுக்கு 1,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை விநியோகிக்க முடியும் என்று அடிப்படை வசதிகள் மற்றும் பொது போக்குவர்த்து, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் கூறினார்.

“இதன் வழி சிலாங்கூர் ஆற்றின் ஆற்றலை மேம்படுத்துவதோடு நீர் தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவையும் அதிகரிக்க முடியும்” என்றார் அவர்.

சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் 60 விழுக்காட்டை விநியோகிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள ஆற்றங்கரைகள் தூர் வாரும் நடவடிக்கைகளுக்காகத் தயார் படுத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :