NATIONAL

தங்களின் தவறுகளை மறைக்க இஸ்லாம் அச்சுறுத்தப்படுவதாக கூறுவதா? – எதிர்க்கட்சியை சாடினார் பிரதமர்

கோலாலம்பூர், மே 9-

தங்கள் தவறுகளை மறைக்கும் ஒரு முயற்சியாக, பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் மலாய் இனமும் இஸ்லாமிய சமயமும் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

மக்களை எளிதில் ஈர்க்கக்கூடிய விவகாரமாக மலாய் மற்றும் இஸ்லாமிய சமயம் திகழ்வதால், தோல்வியுற்ற தரப்பினர் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

“மக்களின் சிந்தனையை திசை திருப்ப, இது போன்ற குற்றச்சாட்டுகளை தோல்வி அடைந்த கட்சி கூறத் தொடங்கியுள்ளது” என்றார்.

அவர்கள் கூறுவது போல் அது நல்லதல்ல என்றால் அதை தங்களின் ஆட்சி காலத்தில் சரிசெய்யாதது ஏன் என்று டிவி1 இல் ஒளிபரப்பான சிறப்பு நேர்காணலின் போது மகாதீர் கேள்வி எழுப்பினார்.


Pengarang :