Amirudin Shari (kanan) bersama Ketua Pengarah SPRM, Latheefa Koya (kiri) menandatangani ikrar bebas rasuah ketika Perhimpunan Bulanan Jabatan- Jabatan Kerajaan Negeri Selangor di Dewan Jubli Perak pada 19 Ogos 2019. – Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

ஊழல் ஒழிப்பு பிரகடனத்தில் சிலாங்கூர் கையெழுத்திட்டது

ஷா ஆலம், ஆக.19-

ஊழலை துடைத்தொழிக்கும் கடப்பாட்டின் ஒரு பகுதியாக லஞ்சம் ஒழிப்பு பிரகடனத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கையெழுத்திட்டதோடு உறுதியும் எடுத்துக் கொண்டதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் மாதாந்திர கூட்டத்தின் போது இந்தப் பிரகடனம் கையெழுத்திடப்பதாக அவர் சொன்னார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா, மாநில அரசாங்க செயலாளர் டத்தோ முகமட் அமின் அகமது அஹ்யா மற்றும் சட்டமன்ற சபாநாயகர் இங் சுவீ லீம் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பிரகடன அறிக்கை கையெழுத்திடப்பட்டது என்றார்.

இந்தப் பிரகடனத்தில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் டத்தோ தெங் சாங் கிம், இஸாம் ஹாஷிம், டத்தோ அப்துல் ரஷிட் அசாரி, இங் ஸீ ஹான் மற்றும் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.


Pengarang :