Hee Loy Sian berucap pada Majlis Perasmian Mesyuarat Agung Tahunan Cabang Petaling Jaya Selatan 2019 di Dewan MBPJ Jalan PJS 3/14 Taman Medan, Petaling Jaya hari ini. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 8:

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ஹீ லோய் சான் கேட்டுக் கொண்டார். தற்போது மலேசிய மக்கள் அதிகமான அரசியல் நடவடிக்கைகளை கண்டு வெறுத்துப்போய் விட்டனர், அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை  என அதிருப்தி அடைந்து உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” பி40 வர்க்கத்திற்கு எரிபொருள் மானியம்  மற்றும் தோல் கட்டணத்தை அகற்றும் நடவடிக்கை போன்ற வாக்குறுதியை மிக சீக்கிரத்தில் செய்ய வேண்டும். மக்களை இதற்கு மேலும் காக்க வைக்காதீர்கள். மத்திய அரசாங்கம் உடனடியாக செயல்படுத்த வேண்டும். அரசியலை குறைத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்,” என்று பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் ஆண்டு கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு லோய் சான் வலியுறுத்தினார்.

மேலும் பேசுகையில், பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் தலைவருமான லோய் சான் இனங்களிடையே நல்லிணக்கத்தை பேணிக் காத்து, மலேசிய மக்கள் புதிய பராணாமத்தில் பயணிக்க வேண்டும் என்று நினைவு படுத்தினார்.


Pengarang :